“என் இலட்சியத்தில் நான் வெற்றியடைந்ததற்கான இரகசியம், என்னுடைய சிதறாத கவனம்” என்று கூறுகிறார்.
இந்த கவனத்தை எப்படி வளர்த்துக் கொள்வது?
'என்ன இலக்கு? எப்படி அடைவது? எப்போது அடைவது? எவ்வாறு அடைவது?' போன்ற கேள்விகளைக் கேளுங்கள்.
ஒரு இலக்கை அடைய பல்வேறு வழிகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏற்ற வழியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த வழி உங்களை நிச்சயமாக எங்காவது கொண்டு சேர்க்கும். எங்குமே போக முயற்சி செய்யாமல் இருப்பதை விட இது மேல்தானே!
சூரிய ஒளியின் கதிர்களை, பூதக் கண்ணாடியின் மையப் பகுதியில் செலுத்துவதன் மூலம் மிகுந்த வெப்பத்தை உற்பத்தி செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே! இதைப் போல் உங்களுடைய கவனம் முழுவதும் சிறந்த இலக்குகளை, அடையாளம் கண்டு அதை அடைவதிலேயே இருக்க வேண்டும்.
உங்கள் மனம் முழுமையாக உங்கள் இலக்கினை ஏற்றுக்கொண்டால்தான், உடலில் உள்ள ஆற்றல் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்படும். இதுவும் ஒரு தவம் போலத்தான்! இதனால் உங்கள் மனமும் உடலும் ஒரு சேர வலிமை பெறுகின்றன. எனவே, உங்கள் இலக்கினை அடைய மற்றவர்களின் துணை தேவையற்றதாகி விடுகின்றது.
இந்தக் கணக்குப் படி பார்த்தால் 90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர்களால் சிறந்த வாழ்வையோ அல்லது மன அமைதியையோ பெற முடியாது.
No comments:
Post a Comment